தாய்ப்பாலில் பல வகை நோயெதிர்ப்பு சக்திகள் காணப்படுகின்றமை அறிந்ததே.
எனினும் இதுவரை காலமும் கண்டறியப்படாது இருந்த புதிய வகை நுண்ணுயிர் கொல்லி தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
Vanderbilt பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த குழு ஒன்றே இப் புதிய நுண்ணுயிர் கொல்லியினை கண்டுபிடித்துள்ளது.
குறித்த நுண்ணுயிர் கொல்லியானது தாய்ப்பாலில் உள்ள புரதத்தின் ஊடாக சிறிது சிறிதாக குழந்தைக்கு கடத்தப்படுகின்றது.
அதன் பின்னர் குழந்தைகளில் ஏற்படும் அனேகமான பக்டீரியா தாக்கங்களை எதிர்த்து குறித்த நுண்ணுயிர் கொல்லி போராடுகின்றது.
செயற்கையாக பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் கொல்லிகளில் நச்சுப் பதார்த்தங்கள் கண்டிப்பாக இருக்கும் எனவும் ஆனால் தாய்ப்பாலில் இருந்து கிடைக்கும் இந்த நுண்ணுயிர் கொல்லியில் சிறிதளவும் நச்சுப் பதார்த்தங்கள் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.