728x90 AdSpace

  • Latest

    Tuesday, August 22, 2017

    சவுதியில் சொற்ப காரணத்திற்காக விவாகரத்து செய்யும் ஆண்கள்

    சவுதியில் பெண்களுக்கு அதிகமாக கட்டுப்பாடுகள் உள்ளன, ஆண்களின் பாதுகாப்பிலேயே பெண்கள் இருக்கவேண்டும் என்பதால் பெண்களால் பல விஷயங்களில் சுயமாக முடிவெடுக்க முடியாது.
    தந்தை, சகோதரன், மகன் உள்ளிட்ட ஆண்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பெண்கள் முடிவெடுக்க முடியும்.
    தற்போது, சவுதியில் சிறு பிரச்சனைகளுக்காக கூட விவாகரத்து நடப்பது அதிகரித்துள்ளது என திருமணங்களை நடத்தி வைக்கும் ஹுமூத் அல் ஷிம்மாரி என்பவர் தெரிவித்துள்ளார்.
    கணவர் ஒருவர் தனது வீட்டிற்கு விருந்திற்காக நண்பர்களை அழைத்து வந்துள்ளார், அதில், ஆட்டின் தலையை சமைத்து தருமாறு கூறியுள்ளார்.
    அதனை மனைவியை சமைத்து வைக்காத காரணத்தால், நண்பர்களின் முன்னிலையில் என்னை நீ அவமானப்படுத்திவிட்டாய் என கூறி மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
    மற்றொரு நபர், தனது மனைவியுடன் நடந்து செல்கையில் தன்னை விட வேகமாக நடந்து சென்றார் என்ற காரணத்திற்காக விவாகரத்து செய்துள்ளார்.
    மரபுகளை மீறிய நடைமுறைகள், நவீன வளர்ச்சியால் மாறுபட்டுள்ள மனிதனின் மனப்போக்கே காரணமாகவுள்ளது என் தெரிவித்துள்ளார்.
    Item Reviewed: சவுதியில் சொற்ப காரணத்திற்காக விவாகரத்து செய்யும் ஆண்கள் Rating: 5 Reviewed By: Arankam news
    Scroll to Top