இந்தியாவின் கேரள மாநிலத்தில் சிறுமியை பாலியல் குற்றத்திற்கு ஈடுபடுத்திய பெண்ணிற்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏழ்மை காரணமாக தனது பெற்றோரால் சிறுமி ஒருவர் ஷோபா ஜான் என்பவரிடம் விலைக்கு விற்கப்பட்டார்.
இந்த நிலையில் தனது பாதுகாப்பில் வளர்ந்து வந்த அந்த சிறுமியை ஷோபா ஜான் சமூகத்தில் உயர்ப்பதவியில் இருக்கும் பலருக்கும் அறிமுகப்படுத்தி பாலியல் தொழியில் ஈடுபடுத்தியுள்ளார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி பொலிசாரால் மீட்கப்பட்டாள். கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாலியல் வழக்கு தொடர்பில் பொலிசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்திருந்தனர்.
குறித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜெயசந்திரன், ஷோபா ஜான் உள்பட 7 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை கொச்சியில் உள்ள மாவட்ட கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் சிறுமியை பாலியல் குற்றத்தில் ஈடுபட வைத்த 43 வயது ஷோபா ஜானுக்கு நீதிமன்றம் 18 ஆண்டு தண்டனையும் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜெயசந்திரனுக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபாரதமும் விதிக்கப்பட்டது. வழக்கில் இருந்து மற்ற 5 பேரும் போதிய ஆதாரம் இல்லை என முடிவானதால் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
